தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் - கூட்ட நடவடிக்கைகள் - CEO Proceedings - Asiriyar.Net

Tuesday, March 1, 2022

தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் - கூட்ட நடவடிக்கைகள் - CEO Proceedings

 

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்ட நடவடிக்கைகள்.


வேலூர் மாவட்டம், அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் 23.022022 அன்று வேலூர், சத்துவாச்சாரி, ஹோலி கிரா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டம் தமிழ்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டது.


மாவட்டக் கல்வி அலுவலரின் வரவேற்புடன் கீழ்காணும் விவரங்கள் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. - பள்ளிகளில் வழக்கம் போல் நடைபெறும் காலை இறைவணக்க கூட்டம் மற்றும் விளையாட்டு பாடவேளைகள் போன்ற நிகழ்வுகளில் தற்போது SOP விதிப்படி மாணாக்கர்களை ஈடுபடுத்துதல் கூடாது என தெரிவிக்கப்பட்டது. 


பள்ளிகளில் மாணாக்கர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள கழிவறைகள் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டு, தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகளாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சுழற்சி முறையில் ஆசிரியர்களை கொண்டு இப்பணிகள் மேற்பார்வையிடப்படவேண்டும். - பள்ளிகளில் உள்ள பழுதடைந்த, உடைந்த பழைய டெஸ்க் மற்றும் பெஞ்சுகளின் அவ்வப்போது அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 


பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தாங்கள் எடுக்கும் தற்செயல்விடுப்பு மற்றும் இதர விடுப்புகளை தவறாமல் ஆய்வு அலுவலர்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். 


மாவட்டக் கல்வி மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகங்களின் இணையதளங்கள் அவ்வப்போது தவறாமல் பார்க்க வேண்டும். இப்பணிக்கென ஒருவரை நியமித்து அவ்வப்போது பெறப்படும் அறிவுரைகள், தகவல்கள் மற்றும் செய்யப்பட வேண்டிய பணிகள் சார்ந்து தகவல்களை பதிவிறக்கம் செய்து அச்சு பகர்ப்பு (Printout) எடுத்து பதிவேடுகளில் பதிய செய்வதுடன், அவ்வப்போது கோரப்பட்ட விவரங்களை அனுப்ப வேண்டும்.


மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்ட உதவி திட்ட அலுவலரால் கீழ்காணும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.


தற்போது அரசால் ஒதுக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழு (SMC) நிதியிலிருந்து பள்ளி வளாகத் தூய்மை, மாணாக்கர்களின் கழிவறைகள் சுத்தம் செய்யும் பணிகள், குடிநீர் வசதி, பள்ளிக் கட்டிடங்கள் | சுற்று சுவர் பழுதுபார்த்தல், ஆய்வக உபகரணங்களை சரிசெய்யும் பணிகள், மின்சார கட்டணம் தொகை, இணையதள கட்டண தொகை மற்றும் எழுதுப்பொருட்களுக்கென இத்தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. 


குறுவள மையங்களின் உள்ளடக்கிய பள்ளிகள் தவறாமல் பயிற்சிகளில் கலந்துக் கொண்டு பயன்பெற தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் நடைபெறும் போது பணியிலிருந்து விடுவித்து பயிற்சியில் கலந்துக் கொள்ளுமாறு செயல்பட வேண்டும்.


தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர், எந்தவொரு பள்ளியும் சிறப்பாக செயல்பட அப்பாளியின் தலைமை ஆசிரியருடைய முழுப்பங்களிப்பாகும். இது சார்ந்து கீழ்காணும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது. - 


பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் ஏற்படும் சிறு சிறு நிகழ்வுகளை தங்கள் பள்ளி அளவிலேயே சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். - 


உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வு அலுவலர்களின் ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. - 


தொடர்ந்து நடைபெறவுள்ள திருப்புதல் தேர்வுகள் இதர தேர்வுகள் சார்ந்து வினாத்தாட்கள் முற்பகல் மற்றும் பிற்பகலுக்கு தனித்தனியே வழங்கப்படும். - இத்திருப்புதல் தேர்வுகளின் வினாத்தாட்கள் பெற்றுக் கொள்ள பள்ளியிலிருந்து தனிநபர் ஒருவர் நியமனம் செய்து முகப்பு கடிதம் கொடுத்தனுப்பி வினாத்தாட்களை பெற்றுக் கொள்ள வேண்டும். 


பெறப்படும் வினாத்தாட்கள் அன்றைய தினத்திற்குரியதா, எண்ணிக்கைகள் சரியாக உள்ளதா என சரிபார்த்து, பத்திரமாக locker உள்ள பீரோக்களில் சீல் வைத்து பாதுகாக்கப்படவேண்டும். 


- வினாத்தாட்கள் உரிய நேரத்தில் அந்தந்த அறை கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைக்கும் பணியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்களின் பங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டது. 


முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரின் ஆணைகள், அனுமதியின்றி பள்ளி வளாகத்திற்குள் மாணாக்கர்களை சந்திக்க, நிகழ்ச்சிகள் நடத்த, விழிப்புணர்வு முகாம்கள் நடத்த எந்தவொரு பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் அனுமதித்தல் கூடாது.


ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக தலைமை ஆசிரியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட 10 பாடவேளைகளை எடுத்து முன் உதாரணமாக திகழவேண்டும். 

ஆசிரியர்கள் பாடம் போதிக்கும் போது தலைமை ஆசிரியர்கள் உற்றுநோக்கல் பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு, அப்பதிவேடுகள் ஆய்வு அலுவலர்களின் பார்வை மற்றும் ஆய்வின் போது முன்னிலைப்படுத்த வேண்டும். 

மாணவர்களுக்கான Quiz நிகழ்வில் (Basic Assessment Test) பெரும்பாலான பள்ளிகளில் பங்குபெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. எனவே அனைத்து மாணாக்கர்களையும் பங்குபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். "இல்லம் தேடிக் கல்வி" நிகழ்வில் நம் மாவட்டம் முன்னேற்றம் கண்டுள்ளதற்கான பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. 

பள்ளிக்கு வருகைபுரியும் மாணாக்கர்களின் எண்ணிக்கை குறைய காரணங்களை கண்டறிய வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. 

1. Lack of interest - மாணாக்கர்களின் பெற்றோர்களை தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் சந்தித்து பேசிபள்ளிக்கு அனுப்பிட தெரிவிக்க வேண்டும். 

2 பள்ளிபடிப்பு முடிக்கும் முன்பே திருமணம் நடைபெறுதல், 

3. பள்ளிக் கட்டணம் கட்ட முடியாத சூழ்நிலை 

4. குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக பிள்ளைகளை வேலைக்கு அனுப்புதல் மேற்காணும் காரணங்களை களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

இறுதியாக பள்ளி அளவில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையே, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படும் அனைத்து இடையூறுகள் ஏதேனும் இருப்பின் அதனை பள்ளி அளவிலேயே சரிசெய்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.











No comments:

Post a Comment

Post Top Ad