அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து – மாணவர்கள் தலையில் பலத்த காயம் - Asiriyar.Net

Tuesday, March 1, 2022

அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து – மாணவர்கள் தலையில் பலத்த காயம்

 




ராமநாதபுரம்:சாயல்குடி அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் இருவர் காயம் அடைந்துள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள வாகைக்குளம் அரசு தொடக்கப்  பள்ளியில் மேற்கூரையின் கட்டை கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த கட்டை தலையில் விழுந்ததில் நான்காம் வகுப்பு மாணவி ஒருவர் மற்றும் இரண்டாம்  வகுப்பு மாணவர் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.


இதனையடுத்து,அவர்கள் இருவரையும் சாயல்குடி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நான்காம் வகுப்பு மாணவி மற்றும் இரண்டாம்  வகுப்பு மாணவர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இந்த தொடக்கப்பள்ளி 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில்,ஏற்கனவே கட்டடத்தின் தன்மை குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் கொடுத்ததாகவும், ஆனால்,கல்வி அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் தற்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




No comments:

Post a Comment

Post Top Ad