அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - ஜெயக்குமார் (video) - Asiriyar.Net

Tuesday, January 22, 2019

அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - ஜெயக்குமார் (video)


அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமும், கடலோர மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் சர்வதேச உவர்நீர் மீன் மாநாடு, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள மத்திய உவர்நீர் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கையில் அதிமுக எக்ஸ்பிரஸ் வேகத்தில் செயல்பட்டு வருகிறது என்றார்.




Post Top Ad