தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த 422 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோவை சேர்ந்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு வழங்கியது.
புதுக்கோட்டையில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் 14பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பூவண்ணன்,செல்லதுரை,தாமரைச்செல்வன்,யோகராஜா, சாலை செந்தில்குமார் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முத்துச்சாமி,சோமசுந்தரம்,கோலாச்சி, உட்பட 14 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டையை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் கைதான 57 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோவை சேர்ந்த 57பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். விருதுநகரில் 22, நெல்லையில் 9, தஞ்சையில் 8 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் 10 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் 36 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பூவண்ணன், செல்லதுரை, தாமரைச்செல்வன், யோகராஜா, சாலைசெந்தில்குமார் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 422 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.