தமிழக அரசு - பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 11, 2022

தமிழக அரசு - பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

 





தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.


ஆனால் பத்து மாதங்கள் ஆகியும் அதற்கான அறிவிப்பு வராத நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். அவ்வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் 6 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டார்கள். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்தே இதை எதிர்த்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள்.


இந்தப் போராட்டம் 19 ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை, ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காப்பீடு முதலிய எந்த பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது என்பதால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பழைய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி போராடி வருகிறார்கள். எனவே இவர்களின் நலனைக் கருதி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.




Post Top Ad