ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2022 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 30, 2021

ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2022

 





2021ஆம் ஆண்டு முடியப்போகிறது. புத்தாண்டு பிறக்கப் போகிறது. புதிதாக பிறக்கப் போகும் 2022ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்குமா என்ற ஏக்கம் அனைவருக்குமே இருக்கும். புத்தாண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும் என்றும் அரசு வேலை யாருக்கு கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.


2022ஆம் ஆண்டில் கால புருஷ தத்துவப்படி சனிபகவான் பத்தாம் இடமான மகரம் ராசியிலும் 11ஆம் வீடான கும்ப ராசிக்கும் செல்கிறார். தற்போது லாப வீட்டில் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருவும் ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக சென்று மீனம் ராசியில் அமரப்போகிறார். 


பின்னர் வக்கிரமடைந்து கும்ப ராசிக்கு சென்று மீண்டும் நவம்பர் மாதத்தில் மீன ராசிக்கு செல்வார். ராகு பகவான் ஏப்ரல் மாதத்தில் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பயணம் செய்கிறார். நவ கிரகங்களில் ஒருவர் ஜாதகத்தில் கிரகங்களின் அமைவு வெளிநாடு செல்லும் யோகத்தை தீர்மானிக்கும். சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 மற்றும் 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வரும். சந்திரன், சுக்கிரன் நீர் கோள்கள். கடல்கடந்த வெளிநாட்டு பயணத்திற்கு அவர்கள் இருவரும் காரணமாகின்றனர். ராகு, சனி காற்றுக்கோள்கள். எனவே இவையும் வெளிநாட்டு பயணத்திற்குக் காரணமாக கிரகங்கள் ஆகும். 2022ஆம் ஆண்டு எந்தெந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.


மேஷம் 

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பொருளாதாரத்தில் ஏற்றம் தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்திருந்தவர்களின் கனவு நனவாகப் போகிறது. சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்தும்,மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையப்போகிறது. சனிபகவான் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் அயல்நாட்டு வியாபாரம் சூடுபிடிக்கும். சனி பகவானும் லாப வீட்டிற்கு வரப்போவதால் உங்களின் வருமானமும் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். படித்து விட்டு அரசு வேலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏப்ரல் மாதம் நிகழப்போகும் அதிசார குரு பெயர்ச்சியும் ராகு கேது பெயர்ச்சியும் சில சாதகமான பலன்களை தரப்போகிறது. திரைகடல் ஓடி திரவியங்கள் தேடி நிறைய சம்பாதித்து ,பேரும் புகழும் கிடைக்கப் பெறுவீர்கள்.


ரிஷபம் 

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் குரு, பாக்ய ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் பயணம் செய்வதால் பாக்கியங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. வெளியூர், வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய வேலை கிடைக்கும். சம்பள உயர்வும் அதிகரிக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. ராகு ஜென்ம ராசியில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். மன அழுத்தங்கள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். ராகு ,கேதுவால் வரக்கூடிய தோஷங்கள் விலகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது.


மிதுனம் 

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, குருவின் பார்வை உங்களுக்கு குதூகலத்தை தரப்போகிறது. கல்வியில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெற முடியும். குருவின் பயணம் சனியின் சஞ்சாரம் சாதகமான பலனை தரப்போகிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். வெளிநாட்டு யோகம் கை கூடி வரப்போகிறது. குருபகவான் அதிசாரமாக பயணிக்கும் காலத்தில் வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். அஷ்டம சனியின் பிடியில் இருந்து விடுபடும் காலம் வந்து விட்டது. மனநிலையில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவடையும். யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சில மாதங்கள் அஷ்டமச்சனியிலிருந்து பாதிப்பை குறைத்து கொள்ள காலபைரவரை சனிக்கிழமை சனிக்கிழமை சென்று வழிபட்டு வரலாம். 


கடகம் 

சந்திரனை ஆட்சி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே 2022ஆம் ஆண்டில் உங்களுக்கு சனியின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும் குருவின் பயணமும் பார்வையும் சாதகத்தை கொடுக்கும். அலுவலகத்தில் பதவிஉயர்வு, சம்பள உயர்வு என கொண்டாட்டமான,குதூகலமான ஆண்டாகவே 2022 ஆம் ஆண்டு இருக்க போகின்றது. தொழில் ஸ்தானத்தில் அமரப்போகும் ராகு பகவானால் படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் சமூக அந்தஸ்தும் மதிப்பும் மரியாதையும் உயரும். பொருளாதாரம் உயரும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். பண வரவும் மனநிறைவும் கொண்ட ஆண்டாக அமையப்போகிறது.


சிம்மம் 

சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கப்பெரும் வருடமாக இந்த 2022 ஆம் ஆண்டு இருக்க போகின்றது. குருவின் பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. பாக்ய ஸ்தானத்தில் பயணிக்கப் போகும் ராகு பகவானால் ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். தொழில் செய்பவர்களுக்கு தொழில் சிறக்கும். சிறிய அளவிலான முயற்சிக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். தடைபட்ட பணி உயர்வு தேடி வரும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். சம்பள உயர்வுகளும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்றபடி வேலை வாய்ப்பு கிடைக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புவர்களின் நோக்கம் நிறைவேறும்.


கன்னி 

அறிவின் நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு 2022ஆம் ஆண்டில் குருவின் பார்வை நேரடியாக கிடைக்கப் போகிறது. ஆண்டின் முற்பகுதியில் சில சறுக்கல்கள் வந்தாலும் ஏப்ரல் மாதம் முதலே சாதனை படிக்கட்டில் பயணம் செய்யப்போகிறீர்கள். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சனிபகவானும் 6ஆம் வீட்டிற்கு செல்வதால் கடன் பிரச்சினை நீங்கும். நோய் பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ராகுவின் சஞ்சாரமும் கேதுவின் பயணமும் யோகங்களைத் தரப்போகிறது. மாணவர்கள் மன குழப்பங்கள் நீங்கி தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். புத்தாண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.


தனுசு 

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஏழரை சனியின் பிடியில் சிக்கித்தவித்த உங்களுக்கு 2022ஆம் ஆண்டு புத்துணர்ச்சி தரக்கூடிய ஆண்டாக கவலைகள் நீங்கக் கூடிய ஆண்டாக அமையப்போகிறது. பிறக்கப்போகும் புத்தாண்டில் குரு பகவான் முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டிலும் சுக ஸ்தானமான நான்காவது வீட்டிலும் பயணம் செய்கிறார். ராகு கேது பெயர்ச்சியும் சாதகமாக உள்ளது. ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் கேது லாப ஸ்தானத்திற்கும் பெயர்ச்சி அடையப்போவதால் உங்களுக்கு மன நிம்மதி நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. ஆரம்பமே அமர்களம் என்பது போல உங்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி புரமோசன் கிடைக்கும். நான்காம் வீட்டில் குரு பயணம் செய்யும் காலத்தில் குருவின் பார்வை பத்தாம் வீட்டில் பதியும் போது புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். உயர்கல்விக்காக காத்திருக்கும் மாணவர்கள் வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். அரசு ஊழியர்களுக்கு மதிப்பு மரியாதை கூடும் பளு நீங்கி நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். 2022ஆம் ஆண்டு ஏழரை சனி விலகும் காலத்தில் திருமண சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். வரன் பேசி முடிவு செய்யலாம். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு திருமணம் கை கூடி வரும். திருமணமாகி சண்டை சச்சரவினால் பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேருவார்கள். புத்திர பாக்கியத்திற்காக காத்திருக்கும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். நோய் பாதிப்புகள் நீங்கி உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.


மகரம் 

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு பிறக்கப்போகும் புத்தாண்டில் சங்கடங்கள் நீங்கி சாதனை புரியும் ஆண்டாக அமையப்போகிறது. சனிபகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு சென்று ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு பகவானும் ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக சென்று ஆட்சி பெற்று அமரப்போகிறார். அதே போல ராகு கேது பெயர்ச்சியும் சாதகமாக உள்ளது. நான்கில் ராகு பத்தாம் வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்வதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். டென்சன், மன அழுத்தம் குறையும். திடீர் வருமானத்தை தரும். வெளிநாடு பயணங்கள் செல்லும் காலம் கை கூடி வந்துள்ளது. மாணவர்களுக்கு படிப்பதற்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. படித்து முடித்து விட்டு காத்திருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வேலையில் மாற்றமும் புரமோசனும் கை கூடி வரும். அரசு அதிகாரிகளுக்கு பளு நீங்கும் புதிய பொறுப்புகள் வரும். வேலைக்கு மதிப்பு மரியாதை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீண் பழிகள் நீங்கும். அவப்பெயர்கள் விலகும். பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். நல்ல வரன் கை கூடி வரும். திருமணம் சுப காரியம் நடைபெறும். குடும்ப வாழ்க்கையில் இருந்த போராட்டங்கள் நீங்கும். திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிடைப்பதில் இருந்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கால்வலி பிரச்சினைகள் வரலாம் விழிப்புணர்வு அவசியம். 


கும்பம் 

கும்ப ராசிக்காரர்களுக்கு 2022ஆம் ஆண்டு ஜென்ம குரு குடும்ப குரு என மாறி மாறி அமைகிறது. சனி ஜென்ம சனியாக வந்து அமரப்போகிறார். ராகு மூன்றாம் வீட்டிலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். வேலையில் மாற்றம் வேண்டாம். அனுபவங்களே உங்களுக்கு படிப்பினையைத் தரும் காலமாகும். வேலையில் அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். அரசு வேலையில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். பொறுப்புகளை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் தேவையற்ற பிரச்சினைகளை கண்டு கொள்ள வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்துங்கள். வேலையில் சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதல் விவகாரங்களில் ஆண்டின் முற்பகுதியில் தடைகள் ஏற்படலாம். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம் வெற்றியில் முடியும். 2022ஆம் ஆண்டு வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். அகலக்கால் வைத்து பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். அலட்சியம் இல்லாமல் இருந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். பயணங்களில் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. சொத்து வாங்கும் போது கவனம் தேவை. வீடு சொத்து வாங்க இது ஏற்ற தருணம் அல்ல. வண்டி வாகனம் வாங்க சரியான நேரம் அல்ல. இந்த குல தெய்வ வழிபாடு குடும்பத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் காக்கும். மொத்தத்தில் 2022ஆம் ஆண்டு சவால்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. எளிதில் சமாளித்து முன்னேறுவீர்கள்.


மீனம் 

2022ஆம் ஆண்டில் மீன ராசிக்காரர்களுக்கு விரைய குருவாக இருந்து அதிசாரமாக ஜென்ம குருவாக மாறுகிறார். சனி பகவான் விரைய சனியாக பயணத்தை தொடங்குகிறார். ராகு இரண்டாவது வீட்டிலும் கேது எட்டாவது வீட்டிலும் பயணம் செய்வதால் கவனமும் விழிப்புணர்வும் கொண்ட ஆண்டாக அமைந்துள்ளது. உங்கள் ராசி நாதன் ஆட்சி பெற்று அமர்கிறார். ஹம்ச யோகம் பெற்று அமரப்போகும் குருவினால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் ஏழரை சனியாக பயணம் செய்யப்போவதால் வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். புது வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் புரமோசன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு இந்த ஆண்டு வாய்ப்புகள் கை கூடி வரும். ஐடி கம்பெனிகளில் கை நிறைய சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவியில் முன்னேற்றம் உண்டாகும். முதலீடுகளில் கவனமும் நிதானமும் தேவை. திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசினாலும் இடையூறுகள் ஏற்படும். வருட பிற்பகுதியில் தடைகளைத் தாண்டி முன்னேற்றம் உண்டாகும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தைக்காக தவம் இருக்கும் தம்பதியினருக்கு தடைகளைத் தாண்டி இந்த ஆண்டு வரமாக புத்திரபாக்கியம் கிடைக்கும். 2022ஆம் ஆண்டு மொத்தத்தில் தடைகளைத் தாண்டி முன்னேறக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது.


விருச்சிகம்

விடிவு காலம் வந்து விட்டது செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்களுக்கு பிறக்கப்போகும் 2022ஆம் ஆண்டு புத்தாண்டு நிறைய நன்மைகளையும் அதிர்ஷ்டங்களையும் தரப்போகிறது. பல ஆண்டுகாலமாகவே கஷ்டத்தை அனுபவித்து வரும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி விடிவுகாலம் பிறக்கப் போகிறது. ஜென்ம கேது ஏழாமிடத்து ராகுவினால் நிறைய தொல்லைகளையும் சங்கடங்களையும் அனுபவித்து வந்த உங்களுக்கு குரு சனியால் எந்த தொந்தரவும் கிடையாது. நல்ல வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு புரமோசன், பதவி உயர்வு தேடி வரும். தொழிலை விரிவுபடுத்தலாம். 


துலாம்

திருமண சுப காரியங்கள் நடைபெறும். மனம் விரும்பிய வாழ்க்கை கை கூடி வரும். காதல் கை கூடி பெற்றோர்கள் ஆசியுடன் திருமணம் நடைபெறும். குருவின் புண்ணியத்தால் புத்திரபாக்கியம் கை கூடி வரும். சிலருக்கு இரண்டாம் திருமணம் சாத்தியமாகும். வெளிநாட்டு யோகம் கை கூடி வரப்போகிறது. வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்வி யோகங்கள் கை கூடி வரும். குருவின் ஆசியுடன் கல்வியை சிறப்பாக தடைகள் இன்றி முடிப்பீர்கள். 2022ஆம் ஆண்டு நினைத்தது நிறைவேறும் அதிர்ஷ்கரமான ஆண்டாக அமைந்துள்ளது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் ஆண்டாக அமைந்துள்ளது.



Post Top Ad