பள்ளி துப்புரவாளர்கள் பணிக்காலம் நீட்டிப்பு - அரசாணை - Asiriyar.Net

Saturday, December 25, 2021

பள்ளி துப்புரவாளர்கள் பணிக்காலம் நீட்டிப்பு - அரசாணை

 




 பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை:  


மாணவர்கள் எண்ணிக்கை 500க்கும் குறைவாக உள்ள 998 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலா ஒரு துப்புரவாளர் பணியிடமும், மாணவர்களின் எண்ணிக்கை 500க்கும் மேலாக உள்ள 996 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 1005 அரசு மேனிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு துப்புரவு பணியாளர் என மொத்தம் 2,999 துப்புரவாளர் பணியிடங்களும், தலா ஒரு காவலர் பணியிடம் வீதம் 2001 காவலர் பணியிடங்களும் கடந்த 2012ம்ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 31.12.2020ம் ஆண்டுவரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை 2018ம் ஆண்டு வழங்கப்பட்டது.


இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில் தற்போது பணியாற்றி வரும் 774 துப்புரவாளர்கள், 470 இரவுக் காவலர்கள் பணியிடங்களுக்கு மட்டும் ஜனவரி 2021 முதல் டிசம்பர் 2023 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, மேற்கண்ட 774 துப்புரவாளர்கள், 470 இரவுக் காவலர்கள்  பணியிடங்களுக்கு மட்டும் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை  முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தனது அரசாணையில் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment

Post Top Ad