கருணை அடிப்படையில் பணி - கூடுதல் விவரங்கள் சமர்ப்பித்தல் மற்றும் தெளிவுரைகள் - இயக்குநர் உத்தரவு! - Asiriyar.Net

Tuesday, December 28, 2021

கருணை அடிப்படையில் பணி - கூடுதல் விவரங்கள் சமர்ப்பித்தல் மற்றும் தெளிவுரைகள் - இயக்குநர் உத்தரவு!

 


கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோருதல் - கூடுதல் விவரங்கள் சமர்ப்பித்தல் மற்றும் தெளிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!





கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு கோரியது சார்பான கருத்துருக்கள் பெறப்பட்டு கடந்த 14/7/2021 அன்று 250 நபர்களுக்கு 17/11/2013 முடிய அரசு ஊழியர் காலமான நாளினை அடிப்படையாகக் கொண்டு முதுநிலைப்படி பணி நியமனம் வழங்கப்பட்டது. நிலுவையிலுள்ள இனங்களுக்கு கூடுதல் விவரங்களை நேரில் சமர்ப்பிக்கும்பொருட்டு ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் ஆய்வு செய்து 18.11.2013 முதல் 31.12.2015 முடிய உள்ள கருத்துருக்களுக்கு 2020-2021 - ம் ஆண்டு காலிப்பணியிடங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பொருட்டு , அனைத்து மாவட்டங்களிலிருந்து பணியாளர்களை வரவழைத்து குறை நிவர்த்தி அறிக்கை அளிக்கவும் , நாளது நாள் வரை கோப்புகள் எதுவும் நிலுவையில்லை எனவும் சான்று வழங்க தெரிவிக்கப்பட்டது. 


கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பது அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது மரணம் அடைய நேரிட்டால் அந்த அரசு ஊழியரையே முழுவதும் சார்ந்துள்ள அவரது வாரிசுகளில் ஒருவருக்கு அரசு பணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும். பணி நடைமுறை விதி 54A : இதற்கு உச்சநீதிமன்றம் பல நிபந்தனைகள் விதித்துள்ளது. அதன்படி , அரசு ஊழியரின் மனைவி ( 1 ) , மகள் ( 2 ) , மகன் ( 3 ) ஆகியோருக்கு வழங்கலாம். வயது வரம்பு மனைவி எனில் அதிகபட்சம் 50 என்றும் வாரிசுதாரர்கள் வயது 35 என்றும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad