சி.இ.ஓ., பற்றி முதல்வர் தனிப்பிரிவுக்கு ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் பெயரில் போலி புகார் மனு அனுப்பியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் பெயரில் போலி கையெழுத்திட்டு, சிவகங்கை சி.இ.ஓ., மணிவண்ணன் மீது 11 குற்றச்சாட்டை வைத்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து அறிந்த முத்துப்பாண்டியன் சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமாரிடம் புகார் மனு அளித்தார்.போலி கையெழுத்திட்டு புகார் மனு அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன், பொருளாளர் கலைச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் புகார் அளித்தனர். உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி., செந்தில்குமார் உறுதி அளித்தார்.
No comments:
Post a Comment