அடுத்த ஆண்டு துவக்கத்தில் மூன்றாம் அலை? - Asiriyar.Net

Sunday, December 19, 2021

அடுத்த ஆண்டு துவக்கத்தில் மூன்றாம் அலை?

 




இந்தியாவில் ஒமைக்ரான் வகை கோவிட் பரவல் துவங்கியுள்ளதையடுத்து அடுத்தாண்டு துவக்கத்தில் மூன்றாவது அலை வரும் என கணிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தேசிய கொரோனா கண்காணிப்பு குழு தலைவரும், ஐதராபாத் இந்திய தொழில்நுட்ப கழக பேராசிரியருமான வித்யாசாகர் நேற்று கூறியதாவது: நம் நாட்டில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் துவங்கி உள்ளது;



இது, அடுத்த ஆண்டு துவக்கத்தில் மூன்றாம் அலையாக உருமாறும்.தற்போது தினசரி பாதிப்பு 7,500 ஆக உள்ளது. டெல்டா வைரசை விட ஒமைக்ரான் சக்தி வாய்ந்தது என்பதால் பாதிப்பு அதிகரித்து பிப்., மாதம் உச்சத்தை எட்டும்.


இருப்பினும் 87 சதவீதம் பேர் முதல் டோஸ், 55 சதவீதம் பேர் இரு டோஸ் என தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதனால் அவர்களிடம் போதிய நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அத்துடன் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியும் மக்களை பாதுகாக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.




No comments:

Post a Comment

Post Top Ad