அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்; அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழக நிதிநிலை சீரானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்; நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்; அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம். அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம், அவர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது எனவும் கூறினார்.
போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும்
ஆங்கிலத்தில் Do or Die என்பார்கள்; அதை Do and Die என்று எடுத்துக்கொள்வேன் - நான் அதிகம் பேசமாட்டேன்; செயலில் காட்டுவேன்
அரசு பணிகளில் சேர வயது வரம்பை உயர்த்தியது திமுக அரசுதான் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment