TNTET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித் தேர்வு - Asiriyar.Net

Friday, December 17, 2021

TNTET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித் தேர்வு

 





இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்கள் தொடர்பாக, அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா சன்னாசிநல்லூரைச் சேர்ந்த பி.முருகன் என்பவர், முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் விளக்கம் கோரியிருந்தார்.


பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியாகும்.


கடந்த 20.7.2018-ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் போட்டித் தேர்வுமூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது தொடர்பான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.


இவ்வாறு அந்த பதிலில் தெரி விக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2020-2021 வருடாந்திர தேர்வுகால அட்டவணையின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2020 ஜுன் 27,28-ம் தேதிகளில் நடைபெறும் என்றும், தொடர்ந்து, தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு 2020 ஜூலை 9-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பு 2020 ஜூலை 17-ம் தேதியும்வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


ஆனால், கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தகுதித்தேர்வும், போட்டித் தேர்வும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.








No comments:

Post a Comment

Post Top Ad