CEO -வை அவதூறாக பேசிய ஆசிரியர் பணியிட மாற்றம் - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு - Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, November 29, 2020

CEO -வை அவதூறாக பேசிய ஆசிரியர் பணியிட மாற்றம் - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு - Proceedings

 


முதன்மைக் கல்வி அலுவலரை அவதூறாக பேசிய பட்டதாரி ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!


கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் -க.எண். B013 / 22 / 2018 நாள் 28-11-2020

பொருள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பால) - திரு.மு.அருண், பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) அரசு உயர் (சொராப் பள்ளி, நெடுபாதி, செருஷ்ணகிரி பாவட்டம் என்பார் முதன் டைாச். கல்வி அலுவலர் அவர்காசந அவதூறாக பேசியதாக பெறப்பட்ட புகார் கடிதங்கள் அடிப்பா யில் அன்னாருக்கு தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் போல்டுலைப்பள்ளிக்கு நிர்வாக மாறுதல் அளித்து ஆக்கையிடல் - சார்பாக. 



பார்வை

1திரு.மு.அருண், பட்டதாரி ஆசிரியர்(கணிதப்) அரசு உயர் நிலைப் பள்ளி நெடுமருதி என்பான முதன்மைக் கல்வி அலுவலரால் 27-11-2020 அன்று நேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது பெறப்பட்ட கடிதம்.



2) நெடுமருதி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களால் முதன்மைக் கல்வி அலுவலருக்கு முவரியிட்டு அளிக்கப்பட்ட நோடி எழுத்து மூலமான புகார் மனுக்கள் நாள் 27-11-2020 கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டம், நெடுமருதி, அரசு உயர் நிலைப் பள்ளியில் கணித பாட பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் திரு.மு.அருண் என்பார் அப்பள்ளியின் தலைமையாசிரியர் மருத்துவ விடுப்பில் இருந்த போது அன்னார் பொறுப்பு தலைமையாசிரியராக இருந்துள்ளார்.



இந்நிலையில் அன்னார் 26-11-2020 அன்று பள்ளியில் அனைத்து வகை ஆசிரியர்கள் கூட்டத்தை கூட்டி கூட்டத்தில் பேசும் போது முதன்மைக் கல்வி அலுவலரை அவதுறாக பேசியதாக தெரியவந்ததையடுத்து அதுகுறித்து 27-11-2020 அப்பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களிடமும் நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நேரடி விசாரணையின் போது அது உண்மை என தெரியவந்தது. மேலும் பொறுப்பு தலைமையாசிரியர் திரு.மு.அருண் என்பார் தான் பேசியது உண்மை தாள் எனவும் மன்னிப்பு கோரி கடிதம் அளித்துள்ளார்,



இச்செயல் தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 ன்படி உயர் அலுவலரை அவதுறாக பேசி தன்னுடைய ஆசிரியர் பணிக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். அதனடிப்படையில் அன்னாருக்கு தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள கணித பாட பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு நிர்வாக மாறுதல் வழங்கி இதன் மூலம் ஆணை வழங்கப்படுகிறது. சம்மந்தப்பட்ட ஆசிரியருக்கு நிர்வாக மாறுதல் அளிக்கப்பட்ட பள்ளியில் பணியில்ர சேரத்தக்க வகையில் பணிவிடுவிப்பு மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கையினை இவ்வலுவலகத்திற்கு பணிந்தனுப்பிட சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெறுதல்

கிருஷ்ணகிரி 18/

திருமு.அருண், பட்டதாரி ஆசிரியர்(கணிதம்), அரசுஉயர்நிலைப்பள்ளி, நெடுமருதி, கிருஷ்ணகிரி மாவட்டம்.

நகல்- தலைமையாசிரியர், அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி, நெடுமருதி / தேன்கனிக்கோட்டை(ஆ) கிருஷ்ணகிரி மாவட்டம்.

நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள் கிருஷ்ணகிரி / தேன்கனிக்கோட்டை

நகல்-

சென்னை-6 பள்ளிக் கல்வி

இயக்குநர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்தனுப்பிவைக்கப்படுகிறது.







Post Top Ad