நிவர் புயல் காரணமாக நாளை ஒருநாள்(புதன்கிழமை) அரசு பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் மகாபலிபுரம் -காரைக்கால் இடையே கரையைக் கடப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று எழிலகத்தில் புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, நிவர் புயல் காரணமாக நாளை (புதன்கிழமை) தமிழகம் முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடப்படுவதாகவும் நிலைமைக்கேற்ப விடுமுறையை நீட்டிப்பது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதேநேரத்தில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மட்டும் பணிக்கு வருவார்கள் என்றார்.
மேலும், நிவர் புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெறுவதால் புயல் கரையைக் கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பொது விடுமுறை விடப்படுகிறது.
கடலோர மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மழையின் அளவைப் பொருந்து செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment