ஜனவரியில் பள்ளிகள் திறப்பு ? - Asiriyar.Net

Monday, November 23, 2020

ஜனவரியில் பள்ளிகள் திறப்பு ?

 


தமிழகத்தில் 2021 ஜனவரியில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியை பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.






தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்பதால் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை தொடர முடிவு செய்துள்ளது. மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியில் யூடியூப் பக்கத்தைப் பார்த்து பயன் பெறலாம் என்று கூறியுள்ளது. அதனால் வருகின்ற 2021 ஜனவரியில் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad