பள்ளி, கல்லுாரிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் மீண்டும் துவக்கம். - Asiriyar.Net

Saturday, November 28, 2020

பள்ளி, கல்லுாரிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் மீண்டும் துவக்கம்.

 



நிவர்' புயலுக்கான அரசு விடுமுறை முடிந்துள்ள நிலையில், பள்ளி, கல்லுாரிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் மீண்டும் துவங்கின.






தமிழகத்தில், கொரோனா ஊரடங்கால் மார்ச்சில் மூடப்பட்ட பள்ளி, கல்லுாரிகள், இன்னும் திறக்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் கல்வி, 'டிவி' வழியாக மாணவர்களுக்கு வீடியோ பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.தனியார் பள்ளி, கல்லுாரிகள், 'ஜூம், கூகுள் மீட்' உள்ளிட்ட இணையதளங்கள் வழியே, ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன. வங்கக்கடலில் உருவான நிவர் புயல் காரணமாக, பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழகம் முழுதும், பள்ளி, கல்லுாரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 





இந்நிலையில், புயல் கரை கடந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால், நேற்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்கின. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மட்டும், வகுப்புகளை நடத்த வேண்டாம் என, பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad