தமிழ்நாட்டில், இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை என, மாநில அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி, தனியார் பள்ளிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று 75 சதவிகித கட்டணத்தில் மீதமுள்ள 35 விழுக்காடு கட்டணத்தை பிப்ரவரிக்குள் வசூலிக்கலாம் என தனியார் பள்ளிகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். இந்த தொகையை தவணை முறையில் வசூலிப்பது குறித்து பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment