பீகார் கல்வித்துறை அமைச்சர் மேவலால் சவுத்ரி 3 நாட்களிலேயே தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பீகார் முதல்வராக 4-வது முறையாக மூன்று நாட்களுக்கு முன்னர் நிதிஷ்குமார் பதவியேற்றார். அவருடன் பாஜக, ஜேடியூ, கூட்டணி கட்சிகளின் 14 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இதில் ஜேடியூ மூத்த தலைவர்களில் ஒருவரான மேவலால் சவுத்ரியும் ஒருவர். அவருக்கு கல்வித்துறை இலாகா ஒதுக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே ஊழல் புகாரில் சிக்கி விசாரணைக்குட்படுத்தவர் மேவலால்.
அவருக்கு எப்படி அமைச்சர் பதவி தரலாம் என்கிற கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. இன்னொரு பக்கம், தேசிய கீதத்தை பாடதெரியாமல் மேவலால் சவுத்ரி தடுமாறும் வீடியோ ஒன்றை ஆர்ஜேடி சமூக வலைதளங்களில் வெளியிட்டது.
இத்தகைய அடுத்தடுத்த புகார்களால் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடும் நெருக்கடி ஏற்ப்பட்டது. இதனையடுத்து மேவலால் சவுத்ரி தமது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
No comments:
Post a Comment