நீதிமன்ற நிலுவை வழக்குகள்‌ - CEO, DEOகளுக்கு புதிய உத்தரவு - இயக்குநரின்‌ செயல்முறைகள் - Asiriyar.Net

Post Top Ad


Friday, November 20, 2020

நீதிமன்ற நிலுவை வழக்குகள்‌ - CEO, DEOகளுக்கு புதிய உத்தரவு - இயக்குநரின்‌ செயல்முறைகள்

 தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை 6 நாள்‌ 18:11.2020. 


பொருள்‌ - பள்ளிக்கல்வி-நீதிமன்ற வழக்குகள்‌ -நிலுவை- உரிய காலத்தில்‌ நீதிமன்ற விதிமுறைகளைப்‌ பின்பற்றி எதிர்வாதவுமை, மேல்முறையீடு, சீராய்வு, மனுக்கள்‌ தாக்கல்‌ செய்தல்‌- காலதாமதம்‌ தவிர்த்திட அறிவுரைகள்‌ வழங்குதல்‌- தொடர்பாக. பள்ளிக்கல்வித்துறையில்‌ அரசு முதன்மைச்‌ செயலர்‌, ஆணையர்‌, பள்ளிக்கல்வி இயக்குநர்‌ ஆகியோரை பிரதிவாதிகளாக சேர்த்து நீதிமன்ற வழக்குகள்‌ தொடரப்படுகின்றன. நீதிமன்ற வழக்குகளை   அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ உடனுக்குடன்‌ ஆய்வு செய்து   மேல்முறையீடு, சீராய்வு மனு போன்றவற்றை தயார்‌ செய்து உரிய காலத்தில்‌ தாக்கல்‌ செய்யாத காரணத்தால்‌ அரசிற்கு நிருவாகச்  சிக்கல்கள்‌ உருவாகும்‌ நிலை ஏற்படுகிறது. 


பார்வையிற்காணும்‌ சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளையின்  இடைக்கானத்‌ தீர்பபபாணையில்‌ காலதாமதமாக மேல்முறையீடு தாக்கல்‌ செய்த அலுவலர்கள்‌  ஒழுங்கு நடவஷக்கை மேற்கொள்ள அறிவறுத்தம்பட்டுள்ளதோடு, அபராதமும்‌ விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆய்வு அலுவலர்களின்‌ கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

Recommend For You

Post Top Ad