ஸ்மார்ட்டா... ஸ்டைலா... நுனி நாக்கில் ஆங்கிலம்...!! தனியார் பள்ளிகளை அடித்து தூக்கி ஓவர்டேக் செய்யும் அரசு பள்ளிகள்...!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 31, 2019

ஸ்மார்ட்டா... ஸ்டைலா... நுனி நாக்கில் ஆங்கிலம்...!! தனியார் பள்ளிகளை அடித்து தூக்கி ஓவர்டேக் செய்யும் அரசு பள்ளிகள்...!!




விரைவில் அரசு பள்ளிக்கூடங்களில் 4000 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ மாணவியருக்கு வாரத்தில் ஒரு நாள் பாட்டு , மற்றும் நடனபயிற்சிகள் வழங்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . விரைவில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் திகழப் போகிறது என அவர் அப்போது தெரிவித்தார் .


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது , அரசுப் பள்ளிகள் காலங்காலமாக கரும்பலகை நடைமுறையில் உள்ளது ஆனால் வரும் பிப்ரவரி மாதம் முதல் 72 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு வசதிகள் செய்யப்படவுள்ளது என்றார் .

அத்துடன் 7200 அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரப்படும் என்றார் . அதேபோல் மாணவர்கள் குறைந்தது 1000 ஆங்கில வார்த்தைகளிலாவது பேசத் தெரிந்துகொள்ளும் வகையில் வாரத்தில் ஒருநாள் அவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வழங்கப்படும் என்றார். ஆங்கிலத்தில் மாணவர்கள் உரையாடும்போது பிழை இருந்தால் அதை திருத்த ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருப்பார் என்றார் .

 



எப்போதும் இல்லாத அளவிற்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றார் , தற்போதுள்ள நிலையில் சில பாடங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது விரைவில் அதை நிவர்த்தி செய்ய சுமார் 4000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் . குறிப்பாக ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவ மாணவியருக்கு வாரத்தில் ஒருநாள் பாட்டு , நடனம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும் என்றார். வரும் பிப்ரவரி மாதத்திற்குள் அரசுப்பள்ளிகளை விஞ்சக்கூடிய அளவிற்கு அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Post Top Ad