மீண்டும் EL Surrender, UPS Pension திட்டம் வருகிறது? - தமிழக அமைச்சரவை ஆலோசனை - Asiriyar.Net

Tuesday, February 4, 2025

மீண்டும் EL Surrender, UPS Pension திட்டம் வருகிறது? - தமிழக அமைச்சரவை ஆலோசனை



தமிழக அமைச்சரவை கூட்டம், வரும், 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான சட்டசபை முதல் கூட்டம், ஜனவரி 6 முதல் 11ம் தேதி வரை நடந்தது.


அதைத்தொடர்ந்து, 2025- - 26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்காக, சட்டசபை இம்மாத இறுதியில் கூடவுள்ளது.


பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய, எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து, வரும் 10ம் தேதி நடக்கவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.


2025-26ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இந்த மாத இறுதியில் தாக்கல் செய் யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்து வரும் 10ம் தேதி முதல் வர்தலைமையில் நடைகிறது. சட்டசபை தேர் தலை மனதில் வைத்துபெறும் அமைச்சரவை 2025-26 பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட அரசு தயாராகி வருகிறது 


 சட்டசபை தேர் தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் என்பதால் அரசு ஊழியர்கள், தாராள அறிவிப்புகள் ஆசிரியர்களின் நீண்ட இருக்கும் என்று எதிர் கால கோரிக்கையான பார்க்கப்படுகிறது. 


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான சரண் விடுப்புக்கு அனு மதி. பழைய பென்ஷன் திட்டத்தை றைப்படுத்துவதில் சிக்கல் உள்ளதால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை செயல்படுத்துவது.

 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள விண்ணப் பங்களில் 10 லட்சம் மகளிரை இணைக்க நிதி ஒதுக்கீடு செய்வது. பள்ளிக்கல்வித்துறையில் 10 ஆண்டுகளுக்கு அதிகமாக பணியாற்றிய ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் என 47 ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரத்தர பணியிடங்களாக மாற்றம் செய்து தமிழக அரசு சமீபத்தில் உத்தர விட்டது. 


அதேபோல மேலும்  பல அறிவிப்புகள் வெளியாகும் என்று திர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை கூட்டம் இதுகுறித் விவாதிக்கவும், பட்ஜெட் கூட்டத் தொடரை எப்போது துவங்குவது, துறை ரீதியான முக்கிய மான அறிவுப்புகளை வெளியிடுவது உட்பட பல்வேறு விஷயங்கள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 10ம் தேதி காவை 11 மணிக்கு நடக்கிறது




No comments:

Post a Comment

Post Top Ad