ஆசிரியர்களின் அலகு மாறுதல்/ துறை மாறுதல் /மனமொத்த மாறுதல் - அறிவுரைகள் - Elementary DEO Proceedings - Asiriyar.Net

Saturday, June 3, 2023

ஆசிரியர்களின் அலகு மாறுதல்/ துறை மாறுதல் /மனமொத்த மாறுதல் - அறிவுரைகள் - Elementary DEO Proceedings

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரது செயல்முறைகளில் மனமொத்த மாறுதல் மற்றும் அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் துறை மாறுதல் விண்ணப்பங்கள் பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் பரிசீலிக்கப்படவேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது பொது மாறுதல் கலந்தாய்வு முடிவுற்றுள்ளதால் ஈரோடு தொடக்கக் கல்வி மாவட்ட நிர்வாக வரம்பில் பணியாற்றும் ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் /அலகு விட்டு அலகு மாறுதல்/ மற்றும் துறை மாறுதல் விண்ணப்பங்களை 02-06- 2023 மாலைக்குள் இவ்வலுவலகத்திற்கு வட்டாரக் கல்வி அலுவலரின் உரிய பரிந்துரையுடன் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.


அலகு விட்டு அலகு மாறுதல்/ மனமொத்த மாறுதல் /மற்றும் துறை மாறுதல் கோரும் விண்ணப்பங்களை தனித்தனியாக தொகுத்து விடுதல் இன்றி பட்டியல் இட்டு இரண்டு பிரதிகளில் ஒப்படைக்கப்பட வேண்டும்.


ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் நகராட்சி பள்ளிக்கு அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பம் அளிக்க கூடாது அத்தகைய விண்ணபங்களை பரிந்துரை செய்து அனுப்பி வைக்கக் கூடாது. அலகு மாறுதல் என்பது மாநகராட்சி பள்ளிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


02-06-2023 மாலைக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலிக்கப்படும் அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிகப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் ஏற்கனவே நடைபெற்ற மாறுதல் கலந்தாய்வு தவிர மீதம் உள்ள மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் பெயர் பட்டியலை ஏற்கனவே கலந்தாய்விற்கு தயாரிக்கப்பட்ட பட்டியலின் படி தயார் செய்தும் மற்றும் பதவி உயர்விற்கான 01.01.2022&01.01.2023 ஆண்டிற்க்கான முன்னுரிமை பட்டியல் மற்றும் தேர்ந்தோர் பட்டியலை தயார் செய்தும் 05.06.2023 அன்று மாலை04,00 மணிக்கு நடைபெறும் வட்டாரக்கல்வி அலுவலருக்கான கூட்டத்தில் சமர்பிக்க தக்க வகையில் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஈரோடு தொடக்கக்கல்வி மாவட்டத்திற்குப்பட்ட அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது

Post Top Ad