‛Treat' கேட்கும் 'BEO' - க்கள் - Asiriyar.Net

Monday, November 14, 2022

‛Treat' கேட்கும் 'BEO' - க்கள்

 

மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களிலும் அரசு, உதவிபெறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டிற்கு ஒருமுறை அறிவிப்பு செய்து ஆண்டாய்வும், அறிவிப்பின்றி குறைந்தது 3 முறை 'சர்ப்ரைஸ்' ஆய்வும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் (பி.இ.ஓ.,க்கள்) நடத்த வேண்டும்.


ஆனால் சில பி.இ.ஓ.,க்கள் ஆண்டாய்வின்போது சம்பந்தப்பட்ட பள்ளிக்கு ஒரு பெரிய லிஸ்ட்டை கொடுக்கின்றனர்.


அதில் விசிட் செல்வோர் பெண் பி.இ.ஓ., என்றால் சிறிய பள்ளிகளில் பட்டுச்சேலை போன்றவையும், பெரிய பள்ளிகள் என்றால் மோதிரம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் இடம் பெறுகிறது. ஆண் பி.இ.ஓ.,க்கள் என்றால் மதிய சாப்பாட்டுக்கு வகை வகையாக பிரியாணி, 'நான் வெஜ்' ஐட்டங்கள் வரிசை கட்டும். ஆய்வு முடிந்தவுடன் 'கனமான கவர்' தயாராக இருக்க வேண்டுமாம். இவற்றை எதிர்பாராத பல நேர்மையான அதிகாரிகளை ஆசிரியர்கள் 'சபாஷ்' என பாராட்டுகின்றனர். ஆனால் சிலருடைய இப்போக்கை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால் ஆண்டாய்வு என்றாலே ஆசிரியர்களுக்கு அலர்ஜியாக உள்ளது.


ஆசிரியர்கள் கூறியதாவது: ஆண்டாய்வுகளில் சிலருடைய செயல்பாடுகளே அதிர்ச்சியடைய வைக்கிறது. ஆய்வு முடிந்த பின் ரூ.5 ஆயிரமாவது கவரில் வைத்து வழங்க வேண்டும்.


அப்பணம் ஆசிரியர்களிடம் வசூலிக்கப்படுகிறது. 'சர்ப்ரைஸ்' ஆய்வு என்றாலும் முன்கூட்டியே அந்த பள்ளிகளுக்கு தகவலை கசிய விடுகின்றனர்.


இதற்காக சில ஆசிரியர்கள் பி.இ.ஓ.,க்களின் எடுபிடிகளாக உள்ளனர். பி.இ.ஓ.,க்கள் ஆசி உள்ளதால் அவர்கள் பெரும்பாலும் கற்பித்தல் பணியை கண்டு கொள்வதில்லை. இதுபோன்ற குறைகளை சி.இ.ஓ., கார்த்திகா கண்டுபிடித்து களையெடுக்க வேண்டும்" என்றனர்.




No comments:

Post a Comment

Post Top Ad