பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு தேதி மாற்றம் - Asiriyar.Net

Sunday, November 27, 2022

பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு தேதி மாற்றம்

 பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை (28ம் தேதி)  நடைபெற இருந்த பணி நிரவல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களை முன்னிட்டு டிச.9ம்  தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 29ம் தேதி நடைபெறும் கலந்தாய்வில்  மாற்றம் இல்லை. நடப்பு கல்வியாண்டில்  (2022-23) 1.8.22 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டதாரி,  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு அனைத்து  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் இருந்து விவரங்கள் பெறப்பட்டு உள்ளது.


இதன்  அடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி, முதுகலை  ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்திற்குள் நிரப்ப தகுந்த காலிப்பணியிடம்  கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் மூலம் நாளை (28ம் தேதி) பட்டதாரி  ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக நாளை (28ம் தேதி) நடைபெற இருந்த  கலந்தாய்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டு,  இதற்குப் பதிலாக டிசம்பர் 9ம்  தேதி கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரவித்துள்ளார். அதே  நேரத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி 29ம் தேதி முதுநிலை பட்டதாரி  ஆசிரியர்களுக்கும் எமிஸ் இணையதளம் மூலமாக கலந்தாய்வு நடக்கிறது. இதில்  மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Top Ad