அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வது என்றால் என்ன? - Asiriyar.Net

Tuesday, November 22, 2022

அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வது என்றால் என்ன?

 


*⭕அரசு பணியில் இருக்கும் போது தவறு ஒருவர் தொடர்ந்து பணியில் இருக்க முடியாது. தவறு செய்தவராக கருதப்படுபவரை அவர் செய்த தவறின் தன்மையை பொறுத்து தொடர்ந்து அரசுப்பணி புரிவது அரசுப்பணிக்கும், அலுவலக நடைமுறைக்கும் குந்தகம் விளைவிக்கும் என்று கருதும்பட்சத்தில் அரசுப்பணியிலிருந்து அவரை தற்காலிகமாக விலக்கி வைக்கும் நடைமுறையே தற்காலிக பணி நீக்கம் ஆகும்.
*⭕இந்த நடவடிக்கை மிகவும் விஸ்தாரமானது. நீதிமன்ற நடவடிக்கை போன்றது. ஆனால் நீதிமன்ற நடவடிக்கைக்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. நீதிமன்ற நடவடிக்கை சாட்சியங்களின் அடிப்படையில் இருக்கும். ஆனால் துறை ரீதியான நடவடிக்கையோ சாட்சியங்களின் உறுதித்தன்மையை மேம்போக்காக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர் குற்றம் செய்திருப்பார் என்று சந்தேகிக்கப்பட்டாலே அவர் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை விதிக்க வழி செய்கிறது.
*⭕அரசின் நம்பகத்தன்மைக்கு எதிராக குற்றம் செய்திருப்பார் என்று தகுதியான அதிகாரி கருதும்பட்சத்தில் குற்றம் செய்தவரை பணியிலிருந்து நீக்க முடியும். எனவே துறை ரீதியான விசாரணைக்கு குற்றம் செய்தவரை உட்படுத்தவும், விசாரணை முடியும் வரை அரசுப்பணியிலிருந்து ஒருவரை தற்காலிகமாக விலக்கி வைப்பதுமே தற்காலிக பணி நீக்கத்தின் நோக்கமாகும்.
*⭕தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கப்பட்டவர் விசாரணை முடித்து இறுதி உத்தரவு வழங்கப்படும் வரை அவர் அரசுப்பணியில் பணிபுரிபவராகவே கருதப்படுவார்.

*⭕Tamilnadu civil Services (Discipline & Appeal) Rule 17(e) ன்படி, ஒருவரை தகுதியான அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யலாம்.
*⭕Removal, Dismissal போன்ற பெருந்தண்டனைகளை வழங்க வேண்டிய அளவுக்கு குற்றங்கள் புரிந்ததாக கருதப்படுபவரை தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கலாம். அல்லது ஒருவர் தொடர்ந்து அரசுப்பணி புரிவது இந்திய இறையாண்மைக்கோ, பொதுநலனுக்கு குந்தகமோ, பாதகமோ ஏற்படும் என்று தகுதியான அதிகாரி கருதும்பட்சத்தில் குற்றம் செய்தவரை பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கலாம்.
*⭕இருப்பினும் தகுந்த காரணமும், முகாந்திரம் இன்றி ஒருவரை தொடர்ந்து தற்காலிக பணி நீக்கத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவை முடிந்தவுடன் அவரை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என விதி 17(e)(6) ல் கூறப்பட்டுள்ளது.
*⭕திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து 7 வருடங்களுக்குள் அரசு ஊழியர் ஒருவரின் மனைவி சந்தேக மரணம் அடைந்தால், காவல் நிலையத்திலிருந்து இதற்கான அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் அரசு ஊழியரான கணவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என Govt. Lr. No - 95405/Per-87-2 P & A. R, Date - 23.3.1988 உள்ளது.
*⭕பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் ஒரு அரசு ஊழியரை தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது என தமிழக அரசு கீழ்கண்டவாறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
*◾G. O. Ms. No - 7681, P & A. R, date - 2.7.1979
*◾Govt. Lr. No - 94184/Per-83-5 P&A. R, date - 1.7.1985
*◾Govt. Lr. No - 20513/Per-N/89-1 P&A. R, date - 4.3.1989
*◾G. O. Ms. No - 439, P&A. R, date - 27.7.1989*
*◾Govt. Lr. No - 75671/Per-N /92-1, P&A. R, date - 9.12.1992
*◾G. O. Ms. No - 37, P&A. R, date - 3.2.1995
*◾Govt. Lr. No - 97772/N/94-1/P&A.R, date - 24.3.1995
*◾Govt. Lr. No - 73552/N/95-3/ P&A. ஏ, date - 9.11.1995
*◾Govt. Lr. (Ms). No - 4/N/2000/P&A.R, date - 21.7.2000*
*◾Govt. Lr. No - 198 /P&A. R, date - 29.12.2005
*◾G. O. Ms. No - 144, P&A. R, date - 8.6.2007
*◾Govt. Lr. No - 70374/N/2007-2/P&A.R, date - 14.3.2008
*⭕இதில் 8.6.2007 ஆம் தேதியிட்ட G. O. Ms. No - 144 என்ற அரசாணையில் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அரசு ஊழியரை பணி நீக்கம் செய்யும் போது என்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
*⭕பணி ஓய்வு பெறும் நாளன்று ஒருவரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்யக்கூடாது. தேவை இருந்தால் பணி ஓய்வு நாளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே நடவடிக்கையை துவக்க வேண்டும். அந்த மூன்று மாத காலத்திற்கு முன்பு எடுக்கும் நடவடிக்கை போர்கால அடிப்படையில் இருக்க வேண்டும்.
*⭕விடுப்பில் இருக்கும் அரசு ஊழியரையும் தற்காலிக பணி நீக்கம் செய்யலாம். இதற்காக அவர் விடுப்பு முடிந்து பணி ஏற்ற பிறகு தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது இல்லை. தற்காலிக பணி நீக்கம் செய்வதால் அவர் அனுபவிக்காமல் எஞ்சியிருக்கிற விடுப்பை ரத்து செய்து அவர் எடுத்த விடுப்பை, இருப்புக் கணக்கில் சேர்க்க வேண்டும். இதற்கு உயர் அதிகாரிகளின் ஆணை தேவையில்லை.
*⭕ஒரு அரசு ஊழியர் 48 மணி நேரத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டதாக எதிர்காலத்தில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால், அவரை சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் deemed suspension ல் வைக்க வேண்டும் (F. R. 54(B)
*⭕பொதுவாக பணி அமர்த்த அதிகாரம் பெற்ற அதிகாரிகள் மட்டுமே பணி நீக்கம் சம்மந்தப்பட்ட ஆணைகளை வழங்க வேண்டும். யாரெல்லாம் தற்காலிக பணி நீக்கம் செய்ய அதிகாரம் உடைய அதிகாரிகள் என விதி 13 மற்றும் 14(a)(1) ல் கூறப்பட்டுள்ளது.
*⭕இருந்தாலும் விதி 14(a)(1) ன்படி பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய பெருந்தண்டனை வழங்க வேண்டிய அளவுக்கு குற்றம் இருந்தால் immediate higher officer கூட தற்காலிக பணி நீக்கம் செய்யலாம்.
*⭕தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட விவரத்தை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.


*⭕பணி ஓய்வுக்குப் பின்னர் ஒருவர் தொடர்ந்து தற்காலிக பணி நீக்கத்தில் இருக்க வேண்டிய தேவையிருந்தாலோ அல்லது பணி ஓய்வு பெறும் நாளன்று ஒருவரை தற்காலிக பணி நீக்கத்தில் வைக்க வேண்டியிருந்தாலோ "பணியமர்வு அதிகாரி" தவறு செய்தவரை தொடர்ந்து பணி நீட்டிப்பு செய்து ஆணை வழங்கி தற்காலிக பணி நீக்கத்திலேயே தொடர ஆணையிட வேண்டும். (F. R. 56(1)(c) மற்றும் G. O. Ms. No - 216, P&A. R, date - 1.9.1998)


Post Top Ad