அரசுப் பள்ளி மானவ்ரகளுடன் துபாயில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் - Photos - Asiriyar.Net

Sunday, November 13, 2022

அரசுப் பள்ளி மானவ்ரகளுடன் துபாயில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் - Photos

 

2021-ம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் நடத்தப்பட்ட விநாடி- வினா போட்டியில் மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட 68 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் துபாய்க்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது.


அதன்படி 68 மாணவர்கள் மற்றும் அவர்கள் பாதுகாப்புக்காக 5 ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சி.அமுதவல்லி உட்பட 3 அதிகாரிகள் என மொத்தம் 76 பேர் துபாய் நகரத்துக்கு இன்று (நவ. 10) முதல் நவ. 13-ம் தேதி வரை 4 நாட்கள் கல்விச் சுற்றுலா விமானம் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். மேலும், ஷார்ஜாவில் நடைபெற்றுவரும் பன்னாட்டு புத்தக திருவிழாவுக்கும் மாணவர்களை அழைத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட சுற்றுலாவுக்கான அனைத்து செலவினங்களையும் துபாய் நகரத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் (Essa AL Ghurair Investment LLC) ஏற்றுக்கொள்ளவும் அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post Top Ad