அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்புகள்: பள்ளிகல்வித்துறை தகவல் - Asiriyar.Net

Thursday, November 3, 2022

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்புகள்: பள்ளிகல்வித்துறை தகவல்

 



தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை சார்ந்த படிப்புகள் மற்றும் வாய்ப்புகள் குறித்த தகவல்களை வலுத்தப்படுத்த அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு நாளை மற்றும் 5ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு உண்டு உறைவிட பயிற்சியாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளது.


இப்பயிற்சி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இப்பயிற்சியில் அரசு உயர் கல்வித்துறையை சார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொரு துறை சார்ந்த படிப்புகளைப் பற்றியும், அதற்கான விண்ணப்பிப்பதில் உள்ள வழிமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் குறித்தும், அரசு கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு பற்றியும், நுழைவுத் தேர்வுகள் மற்றும் இடஒதுக்கீட்டில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் வழங்கப்படவுள்ளன.


சென்னை, கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நினைவு நூற்றாண்டு நூலக வளாகத்தில் பயிற்சி நடைபெறவுள்ளது. எனவே இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாவட்ட ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்


No comments:

Post a Comment

Post Top Ad