ஆசிரியர் சங்கங்களின் கவனத்திற்கு - தொடக்கக் கல்வித்துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுமா? - Asiriyar.Net

Wednesday, April 6, 2022

ஆசிரியர் சங்கங்களின் கவனத்திற்கு - தொடக்கக் கல்வித்துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுமா?

 

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலனுக்காக இயங்கப்பட்டு வரும் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநில பொறுப்பாளர்களின் பணிவான கவனத்திற்கு...

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு பள்ளிக்கல்வித்துறைக்கு இந்தாண்டு கலந்தாய்வு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டது...

ஆனால் தொடக்கக் கல்வித்துறைக்கு???????????????????
நான்கு ஆண்டு காலமாக ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறாமல் உள்ளதை தாங்கள் அறிவீர்களா?????

அறிந்தும் அறியாதது போல் இருக்கிறீர்களா?????

மலைசுழற்சி சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பது அனைவரும் அறிந்ததே...

மார்ச் 7 ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரவேண்டியது... அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகததால் வழக்கு தள்ளி வைக்கப்பட்டது...

என்று வழக்கு விசாரணைக்கு வரும் என்றே தெரியவில்லை, மார்ச் 7 போய் ஏப்ரல் 7 ம் வந்து விட்டது...

இது சம்பந்தமாக எந்த சங்க பொறுப்பாளர்களும் இயக்குநரையோ, ஆணையரையோ சந்தித்து வழக்கை விரைந்து முடித்து கலந்தாய்வை நடத்தச் சொன்னதாகவும் தெரியவில்லை...


மலைசுழற்சி மாறுதலால் (நிர்வாக மாறுதல்) மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் ஒரு வருடம் பணியாற்றச் சென்றுவிட்டு 4 வருடமாக இறங்க முடியாமல் பணிமூப்பில் மூத்த ஆசிரியர்கள், பெண் ஆசிரியர்கள் என வனப்பகுதிக்குள் காட்டு விலங்குகளின் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கிடையே  பேருந்து வசதி கூட இல்லாத ஊருக்கு மிகுந்த மனஉளைச்சல்களுக்கிடையே சென்று பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா?????

இதற்காக யார்தான் குரல் கொடுப்பது???...

                        வேதனையுடன்...Post Top Ad