தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ்மொழி கட்டாயமாக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி தமிழ்மொழி தேர்வில் 40 மதிப்பெண் பெற்றால் மட்டுமே தகுதி எனவும் அறிவிக்கப்பட்டது. இதனை செயல்படுத்தும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 4, விஏஓ தேர்வுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி ஆங்கிலம் நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் பொது அறிவு என இரண்டு பிரிவுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. பகுதி 1ல் தமிழ் மொழித்தாள் இடம் பெற்றுள்ளது. இதில் 10ம் வகுப்பு தரப்பில் கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 100 வினாக்களுக்கு 150 மதிப்பெண் வழங்கப்படும். பகுதி 2ல் பொது அறிவு இடம் பெற்றுள்ளது.
இதில் மொத்தம் 100 வினாக்களுக்குள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தமிழ் பாட பகுதியில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும்,தமிழ் தொண்டுகளும் தொண்டுகளும் என 3 பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பொது அறிவு பிரிவில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய ஆட்சியியல், இந்திய பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment