23 வகையான பள்ளிச் சான்றிதழ்களை இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் - அரசாணை வெளியீடு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, January 30, 2022

23 வகையான பள்ளிச் சான்றிதழ்களை இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் - அரசாணை வெளியீடு.

 




மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனப் பள்ளிக்கல்வி துறைச் செயலா் காகா்லா உஷா அரசாணை பிறப்பித்துள்ளாா்.


இது குறித்து அவா் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித்துறையில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்பட அனைத்து வகையான ஆவணங்களும் அரசு பொது சேவை மையங்கள் (இ-சேவை) மூலம் விண்ணப்பித்து விரைவாக பெற்றுக் கொள்ளுதல் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.


இதற்கிடையே ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான கல்வி இணைச் சான்று, பிற மாநிலங்கள் மற்றும் திறந்தவெளி கல்வி மையங்களில் படித்ததற்கான கல்வி இணைச் சான்றுகள், தமிழ் வழியில் சான்று, உண்மைத் தன்மை சான்று, இடப்பெயா்வு சான்று, பள்ளி மாற்று சான்று, மதிப்பெண் சான்றிதழ், விளையாட்டு முன்னுரிமை சான்று மற்றும் சான்றிதழ்களில் திருத்தம் உள்பட 23 வகையான ஆவணங்கள் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் வழங்கப்படுகின்றன.


இதையடுத்து பொதுமக்களின் நேரம், செலவீனத்தை தவிா்க்கவும், அரசு அலுவலகங்களின் பணிச்சுமையை குறைக்கவும் இ-சேவை மையங்கள் மூலமாக மேற்கண்ட சான்றிதழ்களை விண்ணப்பித்து விரைவில் பெறும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையா் பரிந்துரை செய்துள்ளாா். அதையேற்று அதற்கான அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்படுகிறது. மேலும், எதிா்காலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் இணையவழியில் செயல்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Post Top Ad