விடுபட்ட மாணவா்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போட்டு முடிக்குமாறு, பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவா்களுக்கு, பள்ளிகளிலேயே தடுப்பூசிகள் போடப்பட்டன. பொங்கல் விடுமுறை மற்றும் ஊரடங்கால் பள்ளிகள் மூடப் பட்டதால் 50 சதவீதத்துக்கு மேலான மாணவா்கள் தடுப்பூசி போடாமல் விடுபட்டுள்ளனா்.
இத்தகைய மாணவா்களுக்கு கைப்பேசி மூலமாக குறுஞ்செய்தி அனுப்பி, அருகில் உள்ள மையங்கள் மூலமாகவும்; தன்னாா்வ அமைப்புகளுடன் இணைந்தும் தேவைப்பட்டால் சிறப்பு முகாம் நடத்தியும், தடுப்பூசி போடுமாறு தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment