குப்புற படுத்துக் கொள்வதால், ஆக்சிஜன் திறன் அதிகரிக்கும்' - மருத்துவ நிபுணர்கள் - Asiriyar.Net

Saturday, May 8, 2021

குப்புற படுத்துக் கொள்வதால், ஆக்சிஜன் திறன் அதிகரிக்கும்' - மருத்துவ நிபுணர்கள்

 






கொரோனா நோயாளிகள் காற்றோட்டமான இடங்களில் இருப்பது நல்லது; குப்புற படுத்துக் கொள்வதால், ஆக்சிஜன் திறன் அதிகரிக்கும்' என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.



தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதன் வீரியம் அதிகமாக உள்ளதால், தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 25 ஆயிரத்தை தொட்டு உள்ளது.தற்போது, மாநிலம் முழுதும், 1.15 லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில், 5 சதவீதம் பேருக்கு 'வென்டிலேட்டர்' உதவியுடன் கூடிய தீவிர சிகிச்சையும்; 15 சதவீதத்திற்கு மேலானவர்களுக்கு, ஆக்சிஜன் சிகிச்சையும் தேவை.



இதனால், சிகிச்சை வேண்டி, ஒவ்வொரு மருத்துவமனை வாசல்களிலும், நுாற்றுக்கணக்கானோர், நாள்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலைமை, ஒவ்வொருவருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வராமல் இருக்க, கொரோனா வழிகாட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என, ஒவ்வொருவரையும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.



இது குறித்து, பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது: பேசும் போது, சிரிக்கும் போது, இருமும் போது, தும்மும் போது, காற்றில் மூச்சு திவலைகளுடன் கொரோனா வைரஸ் பரவுகிறது.திறந்தவெளி இடங்களிலும், கதவு ஜன்னல் திறந்து வைக்கப் பட்டு, காற்றோட்டமாக இருக்கும் இடங்களிலும்,வைரஸ் கிருமிகள் உடனடியாக நீர்த்து விடும். 




காற்றோட்டமில்லாத இடங்களில், அதிகமாக தொற்று பரவுகிறது.தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெறுவோர், காற்றோட்டமான இடங்களில் இருப்பது, அவர்களுக்கு நன்மை தரும். குப்புற படுத்துக் கொள்வதால், நுரையீரலில் ஆக்சிஜன் இழுக்கும் திறன் அதிகரிக்கும். இதனால், நுரையீரல் பாதிப்பு தன்மை சற்று குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.





No comments:

Post a Comment

Post Top Ad