முதல்வர் நிவாரண நிதிக்கு 12,004 ரூபாய் வழங்கியது வேலையில்லா கணினி ஆசிரியர்கள் சங்கம் - Asiriyar.Net

Thursday, May 20, 2021

முதல்வர் நிவாரண நிதிக்கு 12,004 ரூபாய் வழங்கியது வேலையில்லா கணினி ஆசிரியர்கள் சங்கம்

 



தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக இன்று ஒரு நாளில் மட்டும் ரூபாய் 12004 மாண்புமிகு முதல்வர் நிவாரண நிதிக்காக வேலையில்லா கணினி ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர்


கொரோனா பரவலின் 2ஆம் அலையால் தமிழ்நாட்டில் மட்டும் நாம் பல உயிர்களை இழந்துள்ளோம். கொரோனா 2ஆம் அலையின் தீவிர தன்மை தமிழகத்தில் இந்தாண்டு மோசமாக உள்ளது.




கொரோனா பாதிப்பு காரணமாக அரசின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ளப் பொதுமக்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலுள்ள பெரு நிறுவனங்கள், தனிநபர்கள், மாணவர்கள் எனப் பலரும் தங்களால் முடிந்த நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர்.



இந்நிலையில், தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக இன்று ஒரு நாளில் மட்டும் ரூபாய் 12004 முதல்வர் நிவாரண நிதிக்காக வேலையில்லா கணினி ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர்.



தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக முதல்வரின் கொரோனா நிவாரண நிதி வழங்கத் தேவையான யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டையும் வெளியிட்டுள்ளார்..


அதன்படி


 https://ereceipt.tn.gov.in/Cmprf/Interface/CMPRF/GroupLogin 


என்ற தளத்தில் சென்று, 


User Name: tnbedcsvips@gmail.com



Password: 9626545446 


தரவுகளைப் பயன்படுத்தி நன்கொடை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..


இது குறித்து அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வெ குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாம் கொடுக்கும் ஒரு ரூபாய் பணமும் ஒரு உயிர் காக்கும் என்பதை மறந்து விடாதீர். நாமும் நம்மால் இயன்றதைச் செய்வோம் கொரோனா என்னும் கொடிய நோயைத் தமிழக மண்ணில் அகற்றுவோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad