ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளார். பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் பற்றி பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்பை ஆசிரியர் ராஜகோபாலன் நடத்தியதாகவும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் தொடர்பாக சென்னையில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளிக்கு மாவட்ட முதன்மை அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பாலியல் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பள்ளி நிர்வாகம் விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலியல் புகாருக்கு உள்ளான சென்னை பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராஜகோபாலனை பிடித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment