1 முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்கும் உத்தரவை தனியார் பள்ளிகள் மீறக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், முழு ஊடரங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு இணையதள வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், 1 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆன்லைன் மூலம் தேர்வு
இதற்கிடையே சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, அந்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்குவதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
புகார் தெரிவிக்கலாம்
கரோனா பரவலால் பிளஸ் 2 தவிர்த்து இதர வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது உரிய விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதவிர இறுதி மதிப்பெண்வழங்குவதில் அரசால் வெளியிடப் படும் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த புகார்களை பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலு வலகங்களில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment