கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் உள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை, பள்ளி வளாகங்களுக்குள் யாரும் கூடாத வகையில், வளாகங்களை பூட்டி வைக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமப்புறங்கள் மற்றும் சில நகர்ப்புறங்களில், அரசு பள்ளி வளாகங்களில் மாணவர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் கூடி, காலையில் நடை பயிற்சி மேற்கொள்வதாகவும், மாலை நேரங்களில் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 'ஊரடங்கு காலம் என்பதால், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளியில், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கு அனுமதியில்லை.
எனவே, பள்ளிகளில் மாணவர்களோ, இளைஞர்களோ கூடி விளையாட அனுமதிக்க வேண்டாம்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.ஊரடங்கு காலத்தில், அத்தியாவசிய அலுவலகங்கள் தவிர, மற்ற அரசு துறை அலுவலகங்கள் செயல்பட அனுமதியில்லை. இதை கருத்தில் கொண்டு, 'மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி வளாகங்களுக்குள், யாரும் வராத வகையில் பூட்டி வைக்க வேண்டும். அதை மீறி கூடினால், போலீசில் புகார் அளிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment