ஆசிரியர்களின் பரிதாப நிலை ஆசிரியர்கள் பலருக்கே தெரியாமல் இருப்பதே இந்த சம்பள குறைப்பு போன்ற பேச்சு எழுவதற்கு காரணமாக அமைகிறது.ஒரு ஆசிரியரின் உண்மை நிலை இதுதான்.
ஆசிரியர்களை மேல் தட்டு மக்களாக சில ஊடகங்களும் சில முட்டாள்களும் சித்தரிக்கிறார்கள். ஆனால் ஒரு ஆசிரியரால் தன்னுடைய வருமானத்தை கொண்டு தன்னுடைய 2 பிள்ளைகளுக்கு தான் விரும்பிய நல்ல கல்வியை கொடுக்க முடியுமா? என்றால் இல்லை. இடைநிலை ஆசிரியர்கள் பலருக்கு வருமான வரி செலுத்தும் தகுதிக்கு தேவையான சம்பளம் கூட இல்லை என்பது என்ன பரிதாபம்.
ஒரு வேளை வருட சம்பளம் 6 லட்சம் பெறும் ஒரு அரசு ஊழியர் கூட தன்னுடைய 2 குழந்தைகளுக்கு தரமான கல்வியை தரமுடியவில்லை என்பது தான் உண்மை நிலவரம். நல்ல தரமான கல்வி நிறுவனங்களில் ஒரு குழந்தைக்கு 1 லட்சம் குறைந்த பட்சமாக கல்வி கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மற்றுமொரு குழந்தைக்கு 1 லட்சம் இதுவே 11&12 வந்து விட்டால் NEET coaching JEE coaching போன்றவற்றுக்கு ஆகும் செலவுக்கும் தான் அளவு கோல் உண்டா? வீட்டு செலவு மட்டும் சும்மாவா நடக்கிறாது அரசி பருப்பு மிளகு காய்கறிகள் போன்றவை சும்மா கிடைக்குமா என்ன? அதற்கே ஒரு தினம் குறைந்தது 200ரூ செலவாகிறது.
இப்போது கூட அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு கொடுத்திருந்தாலும் அதை பயன்படுத்து கொரானோ சிகிட்சை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதா? என்றால் இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டும். தனியார் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பி வழியும் நிலையில் நோயாளிகள் மறுக்கப்படுகிறார்கள். 5 நாளைக்கு 1லட்சம் தந்தால் உங்களை சிகிட்சை செய்கிறேன் என்ற நிலை உள்ளது.
ஒரு வீடு கட்டிவிட்டால் அதுவும் லோன் மூலமாக வீடு கட்டி விட்டால் வாழ்க்கை முழுவதும் வட்டிகட்டி சாகும் நிலை உள்ளது. இந்த வசதி கூட இல்லாத மக்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள் என்பது உண்மையாக இருந்தால் கூட
அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைப்பது என்பது எப்படி சரியாகும் அது போல பேசலாமா? அது குறித்து சிந்திப்பது கூட தவறு என்றே நான் கூறுவேன்
என்னை பொறுத்த வரையில் எனக்கு சம்பளமே வேண்டாமப்பா என்னுடைய இரு மகன்களுக்கும் நல்ல தரமான கல்வியை தாருங்கள் எங்களுக்கு ஒரு வீடு தாருங்கள் எங்களுக்கு நல்ல மருத்துவ வசதிய தாருங்கள் எங்களுக்கு நல்ல உண்வு தாருங்கள். இவை அனைத்தையும் நீஙக்ள் தந்துவிட்டால் அதுவே எனக்கு சம்பளத்துக்கு ஆகும் செலவை விட குறைந்த பட்சம் 2 மடங்காகும். அரசு ஊழியர்களின் நிலை மிகவும் பரிதாபம்.
No comments:
Post a Comment