மொபைல் மூலம் E-pass விண்ணப்பிப்பது எப்படி? - Asiriyar.Net

Saturday, May 22, 2021

மொபைல் மூலம் E-pass விண்ணப்பிப்பது எப்படி?

 



மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ - ரிஜிஸ்டர் செய்வது எப்படி?


வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ ரிஜிஸ்டர் செய்வது எப்படி?


வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் இ- ரிஜிஸ்டர் செய்வது எப்படி?



இ-பாஸ் கிடையாது இ-பதிவு மட்டும் தான்- தமிழக அரசு. 





அத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளே, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ-பாஸ் தேவையில்லை.




https://eregister.tnega.org/#/user/pass




விண்ணப்பிப்பது எப்படி ?


மேற்கண்ட லிங்கில் உள்நுழைந்து மொபைல் எண்ணை பதிவு செய்து கேப்சாவை type செய்து  submit கொடுங்கள்




அடுத்து உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை பதிவிட்டு கேப் சாவை உள்ளிட வேண்டும்


அடுத்து வரும் விண்ணப்பத்தில் நீங்கள் பயணிக்கும் தேர்வை கிளிக் செய்துகொள்ளுங்கள்


வெளிநாட்டில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு வரும் அனைவருக்கும் இ - பாஸ் பெற வேண்டும்


அடுத்து தங்களது பெயர், முகவரி  ( வீடு மற்றும்  செல்லுமிடம்) பயண வரம்பு மாவட்டங் களுக்கு இடையே அல்லது மாநிலங்களுக்கு இடையே என்ற தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.


அதேபோல் பயணத்தின் நேரம் எண்ணிக்கை ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும்


அடுத்து பயனர்கள் விவரம் வாகன விவரம் அடையாள அட்டை ஆகிய விவரங்களையும் பயணத்திற்கான காரணத்தையும் டைப் செய்துகொள்ளுங்கள்.


மருத்துவ அவசர நிலை என்றால் மருத்துவச் சான்று அல்லது அது சம்பந்தப்பட்ட ஆவணம்


திருமண நிகழ்வு என்றால் திருமண அழைப்பிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.


இ -பாஸ் பெறுவதற்கு தங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.


விவரங்கள் அனைத்தும் நிரப்பப்பட்ட தும் தங்கள் ஆவணங்கள் மற்றும் சமர்பிப்பு விபரங்கள் சரிபார்க்கப்படும் அவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டதும் இ  பாஸ் வழங்கப்படும்.



விண்ணப்பதாரர் சரியான தகவல்களை மட்டும் குறிப்பிடுங்கள்.


விண்ணப்பதாரர் பயணம் செய்கிறார் என்றால் விண்ணப்பதாரர் பெயரும் பயணம் செய்வோரின் பட்டியலில் தெரிவிக்கப்படவேண்டும்.


 தொடர்புடைய ஆவணங்களை இணைக்க வேண்டும்.


 நமது விண்ணப்பம் வெற்றிகரமாக  சமர்ப்பிக்கப்பட்டதும் உடனடியாக குறிப்பு எண்ணுடன் SMS  மற்றும் Email (மின்னஞ்சல்) அனுப்பப்படும்


மேலும் உங்கள் சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய உதவி எண்கள்


1070


1072


1800 425 1333


இந்த அவசரகால போக்குவரத்து அனுமதி சீட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது






No comments:

Post a Comment

Post Top Ad