கொரோனா 2ம் அலை பரவ வாய்ப்புள்ளதால் டிசம்பர் வரை பள்ளி திறப்பை தள்ளிவைக்கலாம் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளிகளை ஜனவரி மாதம் திறப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
>
நவம்பர் 16ம் தேதி பள்ளிகளை திறக்கலாமா என கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தபோது பெரும்பான்மையான பெற்றோர் பள்ளி திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா பரவும் அபாயம் இருப்பதை சுட்டிக்காட்டி அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றமும் தள்ளிவைக்க யோசனை தெரிவித்துள்ளதால், ஜனவரி மாதம் பள்ளிகளை திறக்கலாம் என்று தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
No comments:
Post a Comment