டிசம்பருக்குப் பின் பள்ளி கல்லூரிகளைத் திறக்கலாமே? என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 16 முதல் பள்ளி கல்லூரிகளைத் திறக்கும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்துக் கேட்பில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி கல்லூரிகளைத் திறக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
பிற மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் திறந்ததால் மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவி வருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பிற மாநிலங்களில் நிகழ்ந்தவற்றைக் கருத்திற் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment