Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, March 23, 2020

Flash News : தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு






கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றிய அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.

தனிமைப்படுத்துதல் அவசியம் என்பதால், நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது அவசியமாகிறது என்று குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி, தடை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.



LightBlog