கரோனா நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் அனுப்பி வைத்த ஆசிரியர் - Asiriyar.Net

Saturday, March 28, 2020

கரோனா நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் அனுப்பி வைத்த ஆசிரியர்





வேதாரண்யம்: கரோனா நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்தை கருப்பம்புலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் அனுப்பி வைத்துள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளி ஆசிரியை வசந்தா சித்திரவேலு, தனது சொந்த பணம் ரூ.50 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்வரின் நிவாரண நிதி கணக்குக்கு சனிக்கிழமை அனுப்பி வைத்தார்.

கருப்பம்புலம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தா சித்திரவேலு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வரும் இவர், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தொடக்கத்தின் போது வேதாரண்யம் பகுதி பள்ளிகளில் படிக்கும் ஆயிரம் மாணவ, மாணவியருக்கு தனது சொந்த பணத்தில் குடைகளை வாங்கி வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Post Top Ad