பள்ளிகளில் உள்ள தேர்வு ரத்து செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி நியாயமான விலையில் விற்க வேண்டும். கூடுதல் விலையில் கிடைக்கக் கூடாது என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பள்ளி மாணவர்களின் தேர்வை ரத்து செய்வது தொடர்பான எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று வாதிட்டார். இது அனைத்தும் தொடர்பான விரிவான தாக்கல் செய்ய அறிக்கையை மார்ச் 23ம் தேதி சமர்ப்பிக்க வேண்டுமென்று வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Friday, March 20, 2020
Home
Unlabelled
கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் பள்ளி தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக வரும் 23ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு