முடியும் வரை முயற்சி செய்!.... உன்னால் முடியும் வரை அல்ல!..... நீ நினைத்த செயல் முடியும் வரை!
பிரபஞ்சத்தை விட அபார சக்தி கொண்டது உன் மூளை! பிறகென்ன கவலை?
திடமான மனத்துடன் வாழ்ந்தால் என்றென்றும் வளர்ச்சியடையலாம்!
நல்ல எண்ணங்கள் வளர, வளர உள்ளத்தில் வலுவான சக்திகள் உருவாகும்.
கடமைகளை வெற்றி, தோல்வி பாராமல் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் புதிய பாதை நமக்காகத் திறந்தே இருக்கும்!
சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தால்தான் சாதனை படைக்க முடியும்.
மகத்தானவர் காணும் மகத்தான கனவுகள் எப்போதும் நனவாகின்றன.
உறங்கும்போது உருவாவது அல்ல கனவு! உங்களை உறங்கவிடாமல் செய்கிறதே அதுதான் கனவு.
வெற்றி என்பது நம் நிழல் போல. வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது அது நம் பின்னால் வரும்!
சாவி இல்லாத பூட்டு இருக்காது! தீர்வு இல்லாத பிரச்னையும் இருக்காது!