தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி- தமிழக முதல்வர் அறிவிப்பு!!
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
உத்தர பிரதேசத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என்று அம்மாநில அரசு அறிவித்தது.
பின் குஜராத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதையடுத்து புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கை முன்னிட்டு, மாணவர்கள் நலன் கருதி, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது." என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.