நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறை மற்றும் 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில்வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் ஏப். 1 முதல் துவங்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.