வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை எச்சரித்துள்ளது.
இதனை தொடர்ந்து, பணிக்கு வராத அரசு ஊழியர்கள் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும் என வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால் ஆணை பிறப்பித்துள்ளார். வருவாய்த்துறை பணியாளர்கள் போராட்டத்தால் கஜா புயல் நிவாரண பணிகள் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.