அரசு ஊழியர் ஊதிய உயர்வில் உள்ள குறைபாடுகளை, களைவதற்காக அமைக்கப்பட்ட, ஒரு நபர் குழு, நேற்று முதல்வர் பழனிசாமியிடம், அறிக்கை தாக்கல் செய்தது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதில், முரண்பாடுகள் இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், போராட்டங்களை நடத்தின.
இதையடுத்து, ஊதிய உயர்வில் உள்ள, குறைபாடுகளை களைவதற்காக, நிதித்துறை செலவினங்கள் முதன்மை செயலர் சித்திக் தலைமையில், ஒரு நபர் குழுவை, தமிழக அரசு நியமித்தது.இக்குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேசியது; அவர்கள் அளித்த, கோரிக்கை மனுக்களை பரிசீலித்தது.
குழுத் தலைவரான சித்திக், ஒரு நபர் குழு அறிக்கையை, முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினார். அப்போது, தலைமை செயலர் கிரி