Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, September 30, 2018

மாணவியை கிண்டல் செய்த வழக்கு பள்ளி மாணவனுக்கு நீதிபதி நூதன தண்டனை


வந்தவாசி அருகே பள்ளி மாணவியை கிண்டல் செய்த வழக்கில், மாணவன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் சேவை செய்யவேண்டும் என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 16.3.2017ல், அதே பகுதியை சேர்ந்த 16 வயது மாணவன், தனது உறவினர்கள் 2 பேருடன்  சேர்ந்து, மாணவியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட மாணவியின் பெற்றோரை 3 பேரும் சரமாரி தாக்கி மிரட்டல் விடுத்தார்களாம்.

இதுகுறித்து மாணவியின் தந்தை கீழ்கொடுங்காலூர்  போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் 16 வயது மாணவன் மட்டும், திருவண்ணாமலை இளம்சிறார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். 

வழக்கை நீதிபதி விக்னேஷ் பிரபு விசாரித்து, மாணவன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் டாக்டர் மற்றும் நர்ஸ்களுக்கு உதவியாக ஒரு மாதம் சேவை செய்ய வேண்டும் என நேற்று தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து நேற்று முதல் அந்த மாணவன், அரசு மருத்துவமனையில் சேவை பணியை மேற்கொண்டு வருகிறார்.
LightBlog