New Whatsapp Update: Messageஐ Open பண்ணாமல் Photo வை பார்க்கலாம்! - Asiriyar.Net

Wednesday, September 26, 2018

New Whatsapp Update: Messageஐ Open பண்ணாமல் Photo வை பார்க்கலாம்!





வாட்ஸ்ஆப்பில் மெசேஜை ஓபன் பண்ணாமல் ஒருவர் அனுப்பிய ஃபோட்டோவை பார்க்கும் வசதி வர உள்ளதாக தெரிகிறது.

ஒருவர் அனுப்பும் வாட்ஸ்ஆப் மெசேஜை நோட்டிஃபிகேஷன்களில் என்ன என்று பார்த்துவிடலாம். ஆனால், ஒருவர் புகைப்படம் அனுப்பி இருந்தால், அது என்ன என்பதை பார்க்க மெசேஜை திறக்க வேண்டும். இதனை மாற்றும் வகையில் வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்களை டெஸ்ட் செய்து வருகிறது. இன்லைனர் இமேஜஸ் என்று கூறப்படும் இந்த வசதி முன்பே இருக்கிறது. எனினும், தற்போது சோதனையில் உள்ள அப்டேட்டில் நோட்டிஃபிகேஷனிலேயே அந்த படத்தை பெரிதாக்கி பார்க்க முடியும்.


இந்த சோதனை அப்டேட் 'ஆண்ட்ராய்டு 9 பை' சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். மெசேஜ் ஸ்டைலிலும் மாற்றங்கள் கொண்டு வர வாட்ஸ்ஆப் முடிவு செய்துள்ளது. மேலும், வீடியோ அல்லது ஜிஃபை பொறுத்தவரை, அவற்றின் ஐகான்கள் மட்டுமே நோட்டிஃபிகேஷனில் தெரியும்.

Post Top Ad